ADDED : ஜூன் 13, 2025 11:58 PM
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பில் டாக்டர் கே.எஸ்.கிருஷ்ணன் கைப்பந்து கழகம், விருதுநகர் மாவட்ட கைப்பந்து கழகத்தின் சார்பில் மாவட்ட வாலிபால் போட்டி நடந்தது.
இதனை கைப்பந்து கழக தலைவர் சங்கரலிங்கம், செயலாளர் நடராஜன் நிறுவனர் ராம் சுந்தர் துவக்கி வைத்தனர்.
போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 14 அணிகள் பங்கேற்றது.
இதில் ராஜபாளையம் சிட்டி வாலிபால் கிளப் முதல் பரிசு, மம்சாபுரம் சிட்டி வாலிபால் கிளப் 2ம் பரிசு, சிவகாசி அணி 3ம் பரிசை பெற்றது.
பரிசளிப்பு விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி, மாவட்ட கைப்பந்து கழக தலைவர் செல்வ கணேஷ், செயலாளர் பொன்னியின் செல்வன், தலைமை ஆலோசகர் சுந்தரராஜன், தலைமையாசிரியர் ராஜசேகரன் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.