/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ அரசு பள்ளிகளுக்கு செல்லும் மண் பாதைகளால் சிரமம் சேறும் சகதியுமாகும் அபாயம் அரசு பள்ளிகளுக்கு செல்லும் மண் பாதைகளால் சிரமம் சேறும் சகதியுமாகும் அபாயம்
அரசு பள்ளிகளுக்கு செல்லும் மண் பாதைகளால் சிரமம் சேறும் சகதியுமாகும் அபாயம்
அரசு பள்ளிகளுக்கு செல்லும் மண் பாதைகளால் சிரமம் சேறும் சகதியுமாகும் அபாயம்
அரசு பள்ளிகளுக்கு செல்லும் மண் பாதைகளால் சிரமம் சேறும் சகதியுமாகும் அபாயம்
ADDED : மே 31, 2025 12:25 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளுக்கு செல்லும் மண் பாதைகளால் சிரமம் ஏற்படுகிறது. ஜூன் 2 முதல் பள்ளிகள் திறப்பதால் மண்பாதைகள் சேறும், சகதியாகும் அபாயம் உள்ளது.
மாவட்டத்தில் ஊரகப்பகுதி மாணவர்களின் தேவையை அறிந்து அரசு பள்ளிகள் செயல்படுத்தப்படுகின்றன.
இந்த அரசு பள்ளிகளில் பெரும்பான்மையானவற்றில் சுற்றுச்சுவர் இல்லாதது பெரிய பிரச்னையாக இருந்து வருகிறது. இதனால் விஷப்பூச்சிகள்நடமாட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது என பணிபுரியும் ஆசிரியர்கள், ஊழியர்கள் கூட அச்சப்படுகின்றனர்.
இதே போன்ற புதிய பிரச்னையாக பள்ளிக்கான ரோடு வசதி பிரச்னை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதன் பாதைகள்பெரும்பாலும் மண்பாதைகளாக இருப்பதால் மழைக்காலங்களில் மாணவர்கள் செல்லும் போது சறுக்கி விழுந்து விபத்தை சந்திக்கின்றனர். இவ்வாறு விழுவதில் ஆசிரியர்களும் விதி விலக்கல்ல.
இந்த சூழலால் கடும் சிரமம் ஏற்படுகிறது. பெரும்பாலான அரசு பள்ளிகளில் இந்த நிலை தான் உள்ளது. இதை ஊராட்சி நிர்வாகங்களும் கண்டு கொள்வதே கிடையாது.
இதை தவிர்க்க எந்தெந்த அரசு பள்ளிகளின் பாதை மண்பாதையாக உள்ளது என்பதை கண்டறிந்து அங்கு தேவையான ரோடு வசதி ஏற்படுத்த வேண்டும்.
மேலும் நீண்ட நாள் கோரிக்கையான சுற்றுச்சுவரை ஏற்படுத்தினால் தான் குழந்தைகளின் பாதுகாப்பான கல்வி உறுதி செய்யப்படும்.