ADDED : ஜன 05, 2024 05:32 AM
வத்திராயிருப்பு : வத்திராயிருப்பில் கடந்த மாதம் பெய்த மழையின் காரணமாக சில மாடுகள் நோய்வாய்ப்பட்டு இறந்துள்ளன.
மேலும் பல மாடுகள், ஆடுகளுக்கு நோய் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட ஆடுகள், மாடுகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கவும், உயிரிழந்த மாடுகளுக்கு இழப்பீடு வழங்கவும் பாதிக்கப்பட்டோர், தாசில்தார் மாரிமுத்துவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.