/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ நில வழிகாட்டி மதிப்பை 30 சதவீதம் உயர்த்தி பதிவு செய்ய நிர்பந்தம் பத்திர எழுத்தர்கள், மக்கள் புகார் நில வழிகாட்டி மதிப்பை 30 சதவீதம் உயர்த்தி பதிவு செய்ய நிர்பந்தம் பத்திர எழுத்தர்கள், மக்கள் புகார்
நில வழிகாட்டி மதிப்பை 30 சதவீதம் உயர்த்தி பதிவு செய்ய நிர்பந்தம் பத்திர எழுத்தர்கள், மக்கள் புகார்
நில வழிகாட்டி மதிப்பை 30 சதவீதம் உயர்த்தி பதிவு செய்ய நிர்பந்தம் பத்திர எழுத்தர்கள், மக்கள் புகார்
நில வழிகாட்டி மதிப்பை 30 சதவீதம் உயர்த்தி பதிவு செய்ய நிர்பந்தம் பத்திர எழுத்தர்கள், மக்கள் புகார்
ADDED : ஜூன் 27, 2025 12:36 AM
ராஜபாளையம்: ராஜபாளையம் சார்பதிவு அலுவலகத்தில் நிலங்களுக்கு வழிகாட்டி மதிப்பை 30 சதவீதம் வரை உயர்த்தி பத்திரப் பதிவு செய்ய சார் பதிவாளர் நெருக்கடி அளிப்பதால் அடையாள வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாக ஆவண எழுத்தர்கள் சங்கத்தினர் தெரிவித்துஉள்ளனர்.
தமிழகத்தில் பத்திரப்பதிவுத்துறை மூலம் நிலம் விற்பனை, குத்தகை ஒப்பந்தம் உட்பட பல்வேறு ஆவணங்கள் பதிவு செய்யப்படுகிறது. இதற்காக முத்திரைத்தாள் கட்டணம், பதிவு கட்டணம் மக்களிடம் வசூலிக்கப்படுகிறது.
2023ல் பிரமாண பத்திரம் ஒப்பந்தம் பொது அதிகாரம் உள்ளிட்ட 22 வகையான பத்திரப்பதிவுகளுக்கு 10 முதல் 33 சதவீதம் வரை முத்திரைத்தாள் கட்டணம் உயர்த்தப்பட்டு 2024 மே மாதம் முதல் நடைமுறைக்கு வந்தது. அத்துடன் சொத்தின் வழிகாட்டி மதிப்பும் உயர்த்தப்பட்டது இதனால் நிலங்களுக்கான சந்தை மதிப்பு, பதிவு கட்டணம் உயர்ந்தன.
இந்நிலையில் ராஜபாளையம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் அனைத்து வகையான நிலங்களின் பத்திர பதிவிற்கு வழிகாட்டி மதிப்பை விட 30 சதவீதம் உயர்த்தினால் மட்டுமே பத்திர பதிவு செய்யப்படும் என சார் பதிவாளர் வாய்மொழி உத்தரவிட்டுள்ளதாக பத்திர எழுத்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் நில ஆவணங்களை பதிவு செய்ய முடியாமல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அங்கீகரிக்கப்பட்ட பத்திர ஆவண எழுத்தர்கள் கூறுகையில், வழிகாட்டி மதிப்பு இணையத்தில் பொதுவெளியில் உள்ளது. ஆனால் வழிகாட்டி மதிப்பை விட 30 சதவீதம் கூடுதலாக குறிப்பிட்டால் மட்டுமே பத்திரப்பதிவு செய்யப்படும் என நிர்பந்திப்பது சரியல்ல. இதனால் கட்டணத் தொகை அதிகரிப்பதுடன் மக்களிடம் பிரச்னை ஏற்படுகிறது.
ஆனால் இரு நாட்களாக பத்திர பதிவு வெகுவாக குறைந்துவிட்டது. எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சார் பதிவாளரை கண்டித்து ஜூன் 30 முதல் இரண்டு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம்.
முத்துசாமி, சார்பதிவாளர்: பத்திரப்பதிவுக்கான வழிகாட்டி மதிப்பை உயர்த்தி கேட்பதில்லை என்றார்.