/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/சிவகாசியில் சேதமடைந்துள்ள மெயின் ரோடுசிவகாசியில் சேதமடைந்துள்ள மெயின் ரோடு
சிவகாசியில் சேதமடைந்துள்ள மெயின் ரோடு
சிவகாசியில் சேதமடைந்துள்ள மெயின் ரோடு
சிவகாசியில் சேதமடைந்துள்ள மெயின் ரோடு
ADDED : பிப் 25, 2024 05:43 AM

சிவகாசி : சிவகாசி முருகன் கோயிலில் இருந்து திருத்தங்கல் செல்லும் ரோடு சேதம் அடைந்திருப்பதால் வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
சிவகாசி முருகன் கோயிலில் இருந்து திருத்தங்கல் செல்லும் ரோடு 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. சிவகாசி நகருக்குள் வரும் வாகனங்கள் இந்த ரோட்டில் தான் வரவேண்டும். தினமும் 1000 த்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் இந்த ரோட்டில் தான் வருகின்றனர். முருகன், பத்ரகாளியம்மன், சிவன் உள்ளிட்ட கோயில்களுக்கு பக்தர்களும் இதே ரோட்டில் தான் சென்று வருகின்றனர்.
தற்போது இந்த ரோடு சேதம் அடைந்து ஆங்காங்கே கற்கள் பெயர்ந்து டூவீலரில் செல்பவர்களை தடுமாற வைக்கிறது. சிறிய மழை பெய்தாலும் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி விடுகின்றது. இதனால் வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்படுகின்றது. எனவே இப்பகுதியில் சேதம் அடைந்த ரோட்டினை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.