/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ஒரே மாதத்தில் சேதமான பாலம் மக்கள் அதிருப்திஒரே மாதத்தில் சேதமான பாலம் மக்கள் அதிருப்தி
ஒரே மாதத்தில் சேதமான பாலம் மக்கள் அதிருப்தி
ஒரே மாதத்தில் சேதமான பாலம் மக்கள் அதிருப்தி
ஒரே மாதத்தில் சேதமான பாலம் மக்கள் அதிருப்தி
ADDED : ஜன 07, 2024 03:56 AM

சிவகாசி: சிவகாசி அருகே தேவர்குளம் லட்சுமி நகரில் புதிதாக போடப்பட்ட பாலம் ஒரே மாதத்தில் சேதம் அடைந்ததால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
சிவகாசி அருகே தேவர் குளம் லட்சுமி நகரில் ரோடு பாலம் சேதம் அடைந்திருந்தது. இதனைத் தொடர்ந்து இங்கு ஒரு மாதத்திற்கு முன்பு புதிதாக ரோடு பாலம் போடப்பட்டது.
இந்நிலையில் பாலம் போடப்பட்ட ஒரு மாதத்திலேயே சேதம் அடைந்து விட்டது. தற்போது பள்ளம் ஏற்பட்டு கம்பிகள் தெரிகின்றது. இதில் பெரிய வாகனங்கள் எதுவும் சென்று வர முடியவில்லை.
தவிர இரவில் சைக்கிள், டூவீலரில் செல்பவர்கள் கீழே விழுகின்றனர். ஒரு மாதத்திலேயே பாலம் சேதம் அடைந்ததால் நிதி வீணடிக்கப்பட்டுள்ளதாக மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
எனவே உடனடியாக பாலத்தை தரமாக அமைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.