ADDED : ஜன 07, 2024 04:01 AM
சாத்துார்; சாத்துார் நடுவப்பட்டியில் நாட்டு நலப்பணி திட்டம் துவக்கவிழா நடந்தது.
எஸ்.ஆர்.என். பாலிடெக்னிக் கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடுவப்பட்டியில் நடைபெற்று வருகிறது. துவக்கவிழாவிற்கு முதல்வர் தனலட்சுமி தலைமை வகித்தார்.
கம்ப்யூட்டர் துறை தலைவர் ராஜா நிர்மல் வரவேற்றார். சமூக ஆர்வலர் சுப்புராஜ் ஊராட்சி தலைவர் விஜயா, அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பெருமாள் பேசினர்.
முன்னாள் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் விக்னேஷ் வாழ்த்தினார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சதீஷ்குமார் ஏற்பாடுகளை செய்திருந்தார். வசந்தி நன்றி கூறினார்.