/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ விசைத்தறிகளை நவீனமயமாக்க நெசவாளர்களுடன் ஆலோசனை விசைத்தறிகளை நவீனமயமாக்க நெசவாளர்களுடன் ஆலோசனை
விசைத்தறிகளை நவீனமயமாக்க நெசவாளர்களுடன் ஆலோசனை
விசைத்தறிகளை நவீனமயமாக்க நெசவாளர்களுடன் ஆலோசனை
விசைத்தறிகளை நவீனமயமாக்க நெசவாளர்களுடன் ஆலோசனை
ADDED : மார் 27, 2025 06:00 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் விசைத்தறி மேம்பாடு மானியம் தொடர்பாகவும், விசை தறிகளை நவீனமாக்கும் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு சேலம் கைத்தறி துறை துணை இயக்குனர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார்.
துணி நூல் துறை உதவி இயக்குனர் விஜயலட்சுமி, அமலாக்கத்துறை உதவி இயக்குனர் ஜானகி, கைத்தறி துறை உதவி தொழில் நுட்ப அலுவலர் செல்வி முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு அரசு மூலம் விசைத்தறி துறைக்கு கொடுத்துள்ள சாதாரண விசைத்தறிகளை நாடா இல்லாத (ரேப்பியர்) விசை தெரியாத நவீனமாக்குதல் பற்றி ஆலோசனை வழங்கப்பட்டது.
மேலும் அருப்புக்கோட்டையில் வியங்கிவரும் சுமார் 7000 விசைத்தறிவுகளை மேம்படுத்தி ரேப்பியர் சரியாக மாற்றுவதற்கு ஆகும் செலவுத்தொகை தறி ஒன்றுக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் செலவில் அரசு மானியமாக சதவிகிதம் தரப்படும் என அறிவிக்கப்பட்டது.
விசை தறி துணி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பாக விசை தறிகளுக்கு பொருத்தப்படும் எலக்ட்ரானிக் ஜக்கார்டு அமைக்கும் பணிக்கு 3 லட்சம் நிதியில், 50 சதவீதம் தமிழக அரசு தர வேண்டும் என நெசவாளர்கள கோரிக்கை வைத்தனர்.
அருப்புக்கோட்டையில் நெசவாளர் காலனியில் இயங்கி வந்த டி.என்.டி.சி., நூற்பாலை வளாகத்தில் விசைத்தறி பயிற்சி கூடம் அமைக்க வேண்டும் எனவும், அருப்புக்கோட்டையில் உற்பத்தி செய்யப்படும் சேலை ரகங்களை நவீனப்படுத்தப்பட்ட ரேப்பியர் தறியில் உற்பத்தி செய்யும் அமைப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என நெசவாளர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.
நிகழ்ச்சியில் அருப்புக்கோட்டை விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கணேசன் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.