/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மெயின் ரோட்டில் பள்ளத்தை எச்சரிக்க தடை கற்கள் மெயின் ரோட்டில் பள்ளத்தை எச்சரிக்க தடை கற்கள்
மெயின் ரோட்டில் பள்ளத்தை எச்சரிக்க தடை கற்கள்
மெயின் ரோட்டில் பள்ளத்தை எச்சரிக்க தடை கற்கள்
மெயின் ரோட்டில் பள்ளத்தை எச்சரிக்க தடை கற்கள்
ADDED : மார் 27, 2025 05:59 AM
ராஜபாளையம்: ராஜபாளையம் மெயின் ரோட்டில் தாமிரபரணி குடிநீர் குழாய் பள்ளத்தை தவிர்க்க வைக்கப்பட்டுள்ள கற்கள் வாகன ஓட்டிகளை விபத்திற்கு உள்ளாக்கி வருகிறது.
ராஜபாளையம் சங்கரன் கோவில் மெயின் ரோட்டில் புது பஸ் ஸ்டாண்ட் அமைந்துள்ளது.
திருமங்கலம்- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து புது பஸ் ஸ்டாண்டிற்கு இந்த ரோடு வழியே தினமும் நுாற்றுக்கணக்கான பஸ்கள் ஆயிரக் கணக்கில் டூவீலர்கள் கடந்து செல்கின்றன. ஏற்கனவே நகர் பகுதிக்கு இந்த மெயின் ரோட்டில் இருந்து தாமிரபரணி குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு இவற்றில் அடிக்கடி ஏற்படும் உடைப்புகளால் ரோடு சேதமாகி பின்பு சரி செய்வதும் மீண்டும் அழுத்தத்தால் உடைப்பு எடுப்பதும் என தொடர் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 10 நாட்களாக புது பஸ் ஸ்டாண்ட் சங்கரன்கோயில் முக்கு இடையே உள்ள டாஸ்மாக் கடை எதிர்ப்பகுதியில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் வாகனங்கள் தடுமாறி வருகின்றன. இதை எச்சரிக்க பெரிய அளவிலான கற்களை சிலர் பள்ளத்தின் முன்பு வைத்துள்ளனர்.
கடந்த ஒரு வாரத்திற்கு மேல் இதே நிலை உள்ளதால் பகல் நேரங்களில் ஒதுங்கும் வாகனங்களும் இரவு நேரங்களில் விளக்கொளியின்றி கற்கள் இருப்பது தெரியாமல் மோதி பலரும் விபத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
தொடரும் இப்பிரச்னைக்கு உடனே தீர்வு காண வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.