
நரிக்குடி : நரிக்குடி கொட்டகாட்சியேந்தல் கிராமத்தில் காமாட்சியம்மன், செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
யாகசாலை பூஜை, விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாஸ்தி, பூர்வாங்கம், கும்ப அலங்காரம், முதலாம் கால யாகபூஜை, பூர்ணாகதி, தீப ஆராதனை, இரண்டாம் கால யாக பூஜை, பிரம்பசுத்தி, ரக்ஷா பந்தனம், கோ பூஜை, நாடி சந்தனம், கடம் புறப்பாடு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன.
தொடர்ந்து காமாட்சியம்மன், செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. சுவாமிக்கு மஹா அபிஷேகம், அன்னதானம் நடந்தது.
கொட்டகாட்சியேந்தல், கணையமறித்தான்,தேளி, பூவாக்கன்னி உள்ளிட்ட சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்செய்தனர்.