சாத்துார்: சாத்தூர் இறவார்பட்டி செல்லியாராமன், காளியம்மன், காலபைரவர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
முன்னதாக மூன்று காலயாகசாலை பூஜை நடந்தது. நேற்று காலை 10:30 மணிக்கு பட்டர்கள் கோபுரகலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது பின்னர் 11:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இறவார் பட்டி ,சிவகாசி, சாத்துார், ஏழாயிரம் பண்ணை, படந்தால் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு வழிபட்டனர்.