ADDED : ஜன 31, 2024 12:05 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் ஸ்டாண்டில் வட்டார போக்குவரத்து துறை ஆய்வாளர் பூர்ணலதா நடத்திய ஆய்வில் அரசு தனியார் பஸ்களில் விதி மீறிப் பொருத்தியிருந்த ஏர்ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு ஜனவரி 15 முதல் விழிப்புணர்வு முகாம் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று காலை 11:30 மணி முதல் 12 :30 மணி வரை பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியேறிய அரசு , தனியார் பஸ்களை ஆய்வு செய்ததில் மீறி 11 பஸ்களில் பொருத்திருந்த ஏர்ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆய்வின் போது போக்குவரத்து காவல்துறை எஸ்.ஐ..,கள் ராமச்சந்திரன், தர்மராஜ், போலீசார் பங்கேற்றனர்.