ADDED : செப் 12, 2025 04:11 AM
சாத்துார்: சாத்துார் எஸ்.ஆர்.என்.எம். கல்லுாரியில் டேலண்டியா 2025 என்ற பெயரில் பள்ளி மாணவர் களுக்கான கலை இலக்கிய போட்டிகள் நடந்தது.
சாத்துார், கோவில்பட்டி, சிவகாசி, ராஜபாளையம் பகுதிகளில் இருந்து வந்திருந்த 150 மாணவர்களுக்கிடையே பேச்சு, கட்டுரை, ஓவியம், கோலம், நடனப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
பேராசிரியர்கள் ராமானுஜம், சரவணகுமார், சரஸ்வதி பொறுப்பு முதல்வர் அஜந்தா பரிசுகள் வழங்கினர். ஆங்கிலத்துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.