/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சிதிலமாகும் சுவிட்ச் போர்டு மேடை --மழைக்காலங்களில் விபத்து அபாயம் சிதிலமாகும் சுவிட்ச் போர்டு மேடை --மழைக்காலங்களில் விபத்து அபாயம்
சிதிலமாகும் சுவிட்ச் போர்டு மேடை --மழைக்காலங்களில் விபத்து அபாயம்
சிதிலமாகும் சுவிட்ச் போர்டு மேடை --மழைக்காலங்களில் விபத்து அபாயம்
சிதிலமாகும் சுவிட்ச் போர்டு மேடை --மழைக்காலங்களில் விபத்து அபாயம்
ADDED : செப் 10, 2025 08:06 AM

ராஜபாளையம் : ராஜபாளையத்தில் தண்ணீர் தொட்டிக்கு அமைக்கப்பட்ட சுவிட்ச் போர்டு மேடை சிதிலமடைந்து உடையும் தருவாயில் உள்ளதால் மழைக்காலங்களில் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் செல்லும் மெயின் ரோடு ஒட்டி முகில் வண்ணம் பிள்ளை தெருவில் தண்ணீர் தொட்டியும் அதன் அருகில் சுவிட்ச் போர்டுக்கான மேடையும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேடை அமைக்கப்பட்ட செங்கல் ஒருபகுதி சிதிலமடைந்து மோசமான நிலையில் உள்ளது. முழு பயன்பாட்டில் உள்ள தண்ணீர் தொட்டிக்கு சுவிட்ச் போர்டு அபாயகரமான நிலையில் உள்ளதை இப்பகுதியினர் பயன்படுத்தி வருகின்றனர். விபரீதம் ஏற்படும் முன் மின்வாரியத்தினர் சரி செய்ய வேண்டும்.
இது குறித்து சங்கரலிங்கம்: சுவிட்ச் போர்டு பெட்டி தாங்கும் சுவர் ஒரு பகுதி முழுமையாக கரைந்து விட்டது. அந்தரத்தில் உள்ளது போல் நிற்கும் இதன் அருகே சிறுவர்கள் விளையாடுவதும் வாகன போக்குவரத்து இருந்து வரும் நிலையில் விபரீதம் ஏற்பட வாய்ப்புள்ளது. மழைக்கு முன்பே பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்என இப்பகுதியினர் விரும்புகின்றனர்.