/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/அதிக மகசூலுக்கு தென்னை டானிக் விவசாயிகளுக்கு அழைப்புஅதிக மகசூலுக்கு தென்னை டானிக் விவசாயிகளுக்கு அழைப்பு
அதிக மகசூலுக்கு தென்னை டானிக் விவசாயிகளுக்கு அழைப்பு
அதிக மகசூலுக்கு தென்னை டானிக் விவசாயிகளுக்கு அழைப்பு
அதிக மகசூலுக்கு தென்னை டானிக் விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : பிப் 11, 2024 12:38 AM
விருதுநகர்: தோட்டக்கலைத்துறை செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் 10 ஆயிரத்து 390 எக்டேர் பரப்பில் தென்னை பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ராஜபாளையம், வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்துாரில் தனித்தோப்புகளாக மட்டுமில்லாமல், வரப்பு பயிராகவும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
தென்னையில் குரும்பை உதிர்தல், குரும்பை உருவாகாமல் இருத்தல், பூச்சி, நோய் தாக்கம் அதிகமாக இருத்தல், மரங்களின் வீரியமற்ற தன்மை போன்றவை முக்கிய பிரச்னைகளாக இருந்து வருகின்றன.
இதனால் குறைவான மகசூல் கிடைப்பதால் தென்னை சாகுபடி விவசாயிகள் பொருளாதார இழப்புகளை சந்தித்து வருகின்றனர்.
தென்னை இலையின் ஒளிச்சேர்க்கை திறனை அதிகரிக்கவும், பூச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், கோவை வேளாண் பல்கலையால் உருவாக்கப்பட்ட தென்னை டானிக்கை ஒரு மரத்திற்கு 200 மில்லி வீதம் வேரில் பாலிதீன் பை கொண்டு கட்டி பயன்படுத்த வேண்டும்.
இந்த தென்னை டானிக் ஒரு லிட்டர் ரூ.325. இதை பெற அருப்புக்கோட்டை வேளாண் அறிவியல் நிலையம் அல்லது மதுரை வேளாண் கல்லுாரியை அணுகலாம். மேலும் விவரங்களுக்கு அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர்களை அணுகலாம், என்றார்.