/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஆடி அமாவாசை வழிபாட்டிற்கு கூடுதல் நேர அனுமதி சதுரகிரி பக்தர்கள் எதிர்பார்ப்பு ஆடி அமாவாசை வழிபாட்டிற்கு கூடுதல் நேர அனுமதி சதுரகிரி பக்தர்கள் எதிர்பார்ப்பு
ஆடி அமாவாசை வழிபாட்டிற்கு கூடுதல் நேர அனுமதி சதுரகிரி பக்தர்கள் எதிர்பார்ப்பு
ஆடி அமாவாசை வழிபாட்டிற்கு கூடுதல் நேர அனுமதி சதுரகிரி பக்தர்கள் எதிர்பார்ப்பு
ஆடி அமாவாசை வழிபாட்டிற்கு கூடுதல் நேர அனுமதி சதுரகிரி பக்தர்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 28, 2025 06:52 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஜூலை 24ல் ஆடி அமாவாசையை முன்னிட்டு கூடுதல் நேரம் அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இக்கோயிலில் ஆண்டு தோறும் ஆடி அமாவாசை நாளன்று வழிபாடு செய்ய ஏராளமான பக்தர்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருவர். விருதுநகர் மாவட்டம் தாணிப்பாறை வழியாகவும், மதுரை மாவட்டம் பேரையூர் வாழைத்தோப்பு பாதை வழியாகவும், தேனி மாவட்டம் உப்பு துறை வழியாகவும் பக்தர்கள் மலையேறுவது வழக்கம்.
உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் படி தற்போது தினமும் காலை 6:00 மணி முதல் 10:00 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். ஆடி அமாவாசையன்றும் 4 மணி நேரம், கோயிலின் பிரதான வாசலான தாணிப்பாறை வழியாக மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்க வனத்துறை பரிந்துரை செய்துள்ளது.
சாதாரண நாட்களில் 100 முதல் ஆயிரம் பக்தர்கள் வரும் நிலையில் ஆடி அமாவாசை அன்று 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் வருவர். 4 மணி நேரமே பக்தர்கள் அனுமதி என்ற வனத்துறையின் முடிவு பக்தர்களின் பாதுகாப்பை கேள்விக்குரியதாக்கிவிடும். மலைக்கு செல்லும் பாதையில் நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் சிரமம் ஏற்படும்.
எனவே, ஏற்கனவே அனுமதிக்கப்பட்டது போல ஆடி அமாவாசை நாளான ஜூலை 24 மட்டும் காலை 5:00 முதல் மதியம் 12:00 வரை, மூன்று பாதைகளிலும் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.