ADDED : பிப் 24, 2024 05:45 AM

ராஜபாளையம், : ராஜபாளையம் சொக்கர் கோயில் மாசி மக பிரம்மோற்ஸவத்தை முன்னிட்டு தேர் திருவிழா நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
மாசி மகத்தை முன்னிட்டு பிப்.15ல் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தினமும் அதிகாரநந்தி, ஹஸ்தியாழம், காமதேனு, கைலாச, அன்னம், கிளி யானை ரிஷப வாகனம் மற்றும் பூ பல்லாக்கு உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதி உலா நடந்தது.
விழா நாட்களில் யாகசாலை பூஜை, உற்ஸவருக்கு சிறப்பு அபிஷேகம் பன்னிரு திருமுறை பாராயண நிகழ்ச்சி, இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து திருக்கல்யாணம், தெப்போற்ஸவத்தை அடுத்து தேர் திருவிழா நடந்தது. கோயிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட தேரினை பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தரிசனத்திற்காக ராமமந்திரம் வந்து பின் கோயிலை சுற்றி நிலையை அடைந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர் வெங்கட்ராமராஜா குடும்பத்தினர் செய்துஇருந்தனர்.