மத்திய அரசின் சாதனை விளக்க கூட்டம்
மத்திய அரசின் சாதனை விளக்க கூட்டம்
மத்திய அரசின் சாதனை விளக்க கூட்டம்
ADDED : பிப் 06, 2024 12:14 AM
காரியாபட்டி : காரியாபட்டி பாப்பணம் கிராமத்தில் பா.ஜ., கிழக்கு ஒன்றியம் சார்பாக, மத்திய அரசின் சாதனை விளக்க தெருமுனை கூட்டம், உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஒன்றிய தலைவர் ராஜபாண்டி தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் ராமஜெயம், மாவட்ட செயலாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட கூட்டுறவு பிரிவு தலைவர் பாலமுருகன உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் செய்திருந்தனர். ஒன்றிய துணைத் தலைவர் வீரபத்திரன் நன்றி கூறினார்.