/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/போலி சான்றிதழ் மூலம் தபால் அலுவலகத்தில் பணி பெற முயற்சித்தவர் மீது வழக்குபோலி சான்றிதழ் மூலம் தபால் அலுவலகத்தில் பணி பெற முயற்சித்தவர் மீது வழக்கு
போலி சான்றிதழ் மூலம் தபால் அலுவலகத்தில் பணி பெற முயற்சித்தவர் மீது வழக்கு
போலி சான்றிதழ் மூலம் தபால் அலுவலகத்தில் பணி பெற முயற்சித்தவர் மீது வழக்கு
போலி சான்றிதழ் மூலம் தபால் அலுவலகத்தில் பணி பெற முயற்சித்தவர் மீது வழக்கு
ADDED : ஜன 07, 2024 04:02 AM
விருதுநகர்; விருதுநகர் மாவட்டம் பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் பூவனேஷ் 23. இவர் போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரித்து, அதன் மூலம் தபால் துறையில் உதவி கிளை அஞ்சலக அதிகாரி பணி பெற முயற்சித்துள்ளார். கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
விருதுநகர் மாவட்டம் பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் பூவனேஷ். இவர் தபால் துறையில் உதவி கிளை அஞ்சலக அதிகாரி பணிக்கு விண்ணப்பித்துள்ளார். இந்த பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு 2023 ஜூலை 31 ஆன்லைனில் நடந்தது.
இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு விருதுநகர் மாவட்ட தலைமை தபால் துறை அலுவலகத்தில் 2023 ஆக. 21 நடந்தது.
இதில் பூவனேஷ் ஆன்லைனில் சமர்பித்த 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழும், நேரில் சமர்பித்த சான்றிதழும் போலியானது என தெரியவந்தது.
அருப்புக்கோட்டை தபால் துறை உதவி கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் போலீசில் புகார் அளித்தார்.
இதன் அடிப்படையில் போலீசார் பூவனேஷ் படித்த பள்ளியில் விசாரித்த போது 10ம் வகுப்பில் மொத்தம் 307 மதிப்பெண்கள் பெற்றுள்ளதும், இதை மறைத்து 496 மதிப்பெண்கள் பெற்றதாக போலியான மதிப்பெண் சான்றிதழ் தயார் செய்து, அதன் மூலம் உதவி கிளை அஞ்சலக அதிகாரி பணியை பெற முயற்சி செய்ததை கண்டறிந்தனர். இவர் மீது கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.