ADDED : ஜன 11, 2024 05:06 AM
விருதுநகர் : கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: திருநங்கை தினமான ஏப். 15ல் 2023--24ம் ஆண்டிற்கான முன்மாதிரி திருநங்கைகளுக்கான விருதுகளை அரசு வழங்குகிறது.
அரசு உதவி பெறாமல் தானாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருப்பது, குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உதவி இருப்பது ஆகியவை தகுதிகள். நல வாரியத்தில் உறுப்பினராக இருக்க கூடாது.
https://awards.tn.gov.in என்ற தளத்திலோ அல்லது நேரிலோ உரிய ஆவணங்களுடன் ஜன. 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு சமூகநலத்துறையை அணுகலாம். தகுதி உள்ளோர் விண்ணப்பிக்கலாம், என்றார்.