Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ தீபாவளிக்கு புது ரக பட்டாசுகள் வாங்கி வெடிக்க சிவகாசி வாங்க

தீபாவளிக்கு புது ரக பட்டாசுகள் வாங்கி வெடிக்க சிவகாசி வாங்க

தீபாவளிக்கு புது ரக பட்டாசுகள் வாங்கி வெடிக்க சிவகாசி வாங்க

தீபாவளிக்கு புது ரக பட்டாசுகள் வாங்கி வெடிக்க சிவகாசி வாங்க

ADDED : செப் 13, 2025 01:53 AM


Google News
Latest Tamil News
சிவகாசி:தீபாவளி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது பட்டாசு தான். பட்டாசு என்றால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குதுாகலம் அடைவர். யானை, ரயிலை அனைவரும் பார்த்து மகிழ்வதைப் போல பட்டாசு வெடித்து மகிழ்வதை அனைவரும் விரும்புகின்றனர்.

அனைவருக்கும் பட்டாசு பிடிக்கும் என்றாலும் அந்தப் பட்டாசில் பல்வேறு புதுமைகள் புகுத்தினால் தான் விற்பனை செய்ய முடியும். அந்த வகையில் காலத்திற்கு ஏற்ப சிவகாசியில் வித விதமாக பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றது. இந்த தீபாவளிக்கும் சிவகாசியில் குழந்தைகள், சிறியவர்கள், பெண்கள் இளைஞர்கள், பெரியவர்கள் விரும்பும் வகையில் வானில் வர்ணஜாலம் காட்டவும், தரையில் வைத்து கொண்டாடவும் விதவிதமான பட்டாசுகள் தயாரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒரு சிலவற்றை பார்க்கலாம்.

தள்ளி நின்று ரசிக்க தர்பூசணி வெடி : கோடை வெயிலுக்கு தர்பூசணி நல்லது. ஆனால் இந்த தர்பூசணி வெடிப்பதற்கு நல்லது. பற்ற வைத்தவுடன் சிகப்பு, மஞ்சள் கலரில் தீப்பொறி பறந்து சடசடவென வெடித்து மனதை கொள்ளை கொள்ளும். அந்த தர்பூசணியை அப்படியே சாப்பிடலாம் ஜூஸ் ஆகவும் அருந்தலாம். ஆனால் இந்த தர்பூசணியை தள்ளி நின்று ரசிக்க மட்டுமே வேண்டும். சாப்பிட நினைத்தால் கம்பெனி பொறுப்பு ஆகாது.

குதுாகலிக்கும் குங் பூ பாண்டா : குங் பூ பாண்டாவை பார்க்க எங்கும் செல்ல வேண்டாம். சிவகாசி வந்தாலே போதும். இதனை பற்ற வைத்தவுடன் சிகப்பு மஞ்சள் கலரில் பொறி பறந்து 20 அடி உயரம் சென்று நீர் வீழ்ச்சி போல கீழே விழும். குளிக்க நினைக்க கூடாது.

சந்தோசம் தரும் ஜங்கிள் டெண்டா : சிங்கம், புலி, ஓநாய் என மிருகங்களின் முக வடிவமைப்பில் உள்ள இந்த பட்டாசினை பற்ற வைத்த உடன் அதன் வாயிலிருந்து தீப்பொறி சீறிப்பாயும். இதனைப் பார்த்து பயப்பட தேவையில்லை. அதற்காக நெருங்கி செல்லக்கூடாது.

பட்டாசின் பாட்சா பீட்சா : பீட்சா வடிவில் ஆறு வகைகளில் உருவாக்கப்பட்ட இந்த வெடியை பற்ற வைத்தால் ஆறு விதமான வண்ணங்களில் சிறிய சத்தத்துடன் வெடித்து சிதறும். அந்த பீட்சாவை ருசித்து சாப்பிடலாம். இந்த பீட்சாவை ரசித்துப் பார்க்கலாம்.

ஓரம் கட்டும் ஓரியோ : சங்கு சக்கரத்தை சிறுவர்கள் விரும்பும் வகையில் பிஸ்கட் வடிவில் உருவாக்கப் பட்டுள்ளது.

இதனை பற்ற வைத்தால் தீப் பொறியுடன் சும்மா சுற்றி சுற்றி வரும். நாம் எட்டி எட்டி போய்விட வேண்டும்.

காட்டமான ஹாட் மிர்ச்சி : அந்த மிளகாயை அப்படியே சாப்பிட்டால் உரைக்கும். இந்த மிளகாயை பற்ற வைத்தால் சும்மா வெடிக்கும்.

இதனை பயப்படாமல் கையில் பிடித்தும் வெடிக்கலாம். அதற்காக வீட்டிற்குள் கொண்டு செல்லக்கூடாது.

நடுங்க வைக்கும் நருட்டோ அனிமேஷன் : அனிமேஷன் என்றாலே குழந்தைகள், சிறுவர்கள் மிகவும் விரும்புபவர். அவர்களின் ரசனைக்கு ஏற்ப இந்த வெடி உருவாக்கப்பட்டுள்ளது.

இதனைப் பற்ற வைத்தால் பத்தடி உயரத்திற்கு பொறியாக கிளம்பி சென்று பின்னர் 20 அடி உயரம் சென்று வெடிக்கும். இந்த அனிமேஷன் புது பேஷன்.

ராக் ஸ்டார் கிடார் : இந்த வெடியை கையில் பிடித்து வெடிக்கலாம்.

பற்ற வைத்தவுடன் சில்வர் கலர் தீப்பொறி பறந்து செல்லும்.

அந்தக் கிடாரை இசைக்க வேண்டும். இந்தக் கிடாரை வெடிக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us