/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/படுமோசமான நாகலாபுரம் - நிறைமதி ரோடு திண்டாடும் 5 கிராம மக்கள்படுமோசமான நாகலாபுரம் - நிறைமதி ரோடு திண்டாடும் 5 கிராம மக்கள்
படுமோசமான நாகலாபுரம் - நிறைமதி ரோடு திண்டாடும் 5 கிராம மக்கள்
படுமோசமான நாகலாபுரம் - நிறைமதி ரோடு திண்டாடும் 5 கிராம மக்கள்
படுமோசமான நாகலாபுரம் - நிறைமதி ரோடு திண்டாடும் 5 கிராம மக்கள்
ADDED : ஜன 07, 2024 03:58 AM

சிவகாசி:சிவகாசி அருகே ஈஞ்சாரில் இருந்து நாகலாபுரம் வழியாக நிறைமதி செல்லும் ரோடு சேதம் அடைந்திருப்பதால் 5க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போக்குவரத்திற்கு சிரமப்படுகின்றனர்.
சிவகாசி அருகே ஈஞ்சாரில் இருந்து நாகலாபுரம் வழியாக நிறைமதி செல்லும் ரோடு 5 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது.
இதன் வழியாக மக்கள் நிறைமதி கிருஷ்ண பேரி உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று வருகின்றனர். மேலும் பானாங்குளம், தச்சக்குடி, குப்பணாபுரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிவகாசி வருவதற்கு இந்த இந்த ரோட்டினை தான் பயன்படுத்துகின்றனர். இந்த ரோடு முற்றிலும் சேதமடைந்துள்ளது. பெரும்பான்மையான இடங்களில் குண்டும் குழியுமாக மாறிவிட்டது.
இதனால் இப்பகுதியில் போக்குவரத்திற்கு பெரிதும் சிரமப் படுகின்றனர்.
விவசாய காலங்களில் விளை பொருட்களை கொண்டு செல்வதற்கு அவதிப்படுகின்றனர்.
எனவே இப்பள்ளியில் சேதம் அடைந்த ரோட்டினை உடனடியாக சீரமைக்க வேண்டும் என மக்கள் எதிர் பார்க்கின்றனர்.