ADDED : ஜன 28, 2024 06:55 AM
சாத்துார், சாத்துார் அருகே கத்தாளம் பட்டி சிலோன் காலனியை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன், 33. நேற்று முன் போஸ்ட் ஆபீஸ் தெருவில் உட்கார்ந்து மது குடித்தார். அப்போது அங்கு வந்த அவரது நண்பர்கள் சாத்துார் சுந்தர் கருப்பசாமி, 30. விக்னேஸ்வரன், 29. ஆகியோர் தங்களுக்கும் மது வாங்கி தர கூறியுள்ளனர்.
இதில் ஏற்பட்ட தகராறில் மது பாட்டிலை உடைத்த நவநீதகிருஷ்ணன் விக்னேஸ்வரன் மற்றும் சுந்தர் கருப்பசாமி கையில் குத்தினார். இருவரும் திரும்பத் தாக்கியதில் நவநீதகிருஷ்ணன் படுகாயம் அடைந்தார். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.