சத்திரப்பட்டி: சத்திரப்பட்டி வட்டார பேண்டேஜ் துணி விற்பனையாளர்கள் சங்க மகா சபை கூட்டம் புதுத்தெரு தண்டாயுதபாணி சுவாமி கோயில் மண்டபத்தில் நடந்தது. தலைவர் செந்தில் வேல் குரு தலைமை வகித்தார். செயலாளர் ஆறுமுகனி முன்னிலை வகித்தார். பொருளாளர் பாலசுப்ரமணியம் வரவேற்றார்.
கூட்டத்தில் வரவு செலவு கணக்கு சரிபார்த்து ஒப்புதல் பெறப்பட்டு சங்கத்தின் 15 வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. மறைந்த சங்க உறுப்பினருக்கான இரங்கல் தீர்மானத்தை துணை செயலாளர் ஆனந்த முருகன் வாசித்தார்.
கூட்டத்திற்கு சங்க நிர்வாகிகள் கமிட்டியினர், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிர்வாக கமிட்டி உறுப்பினர் பாலு நன்றி கூறினார்.