/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ இரு ஆண்டுகளில் 15 குழந்தை, 95 வளரிளம் தொழிலாளர்கள் மீட்பு தொழிலாளர் உதவி ஆணையர் தகவல் இரு ஆண்டுகளில் 15 குழந்தை, 95 வளரிளம் தொழிலாளர்கள் மீட்பு தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்
இரு ஆண்டுகளில் 15 குழந்தை, 95 வளரிளம் தொழிலாளர்கள் மீட்பு தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்
இரு ஆண்டுகளில் 15 குழந்தை, 95 வளரிளம் தொழிலாளர்கள் மீட்பு தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்
இரு ஆண்டுகளில் 15 குழந்தை, 95 வளரிளம் தொழிலாளர்கள் மீட்பு தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்
ADDED : ஜூன் 12, 2025 01:58 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் 2023 ஏப். 1 முதல் 2025 மே 31 வரை 15 குழந்தை தொழிலாளர், 95 வளரிளம் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என தொழிலாளர் உதவி ஆணையர் ஆனந்தி தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு: சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் இன்று (ஜூன் 12) அனுசரிக்கப்படுகிறது. மேலும் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை எவ்வித பணிகளிலும், 15 முதல் 18 வயதிற்குட்பட்ட வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்தக்கூடாது.
விருதுநகர் மாவட்டத்தில் 2023 ஏப். 1 முதல் 2025 மே 31 வரை 15 குழந்தை தொழிலாளர், 95 வளரிளம் தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். இவர்களை பணிக்கு அமர்த்திய நிறுவனத்தின் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
குழந்தை, வளரிளம் பருவத் தொழிலாளர் யாராவது பணியமர்த்தப்பட்டால் 1098 என்ற எண்ணிற்கும், https://pencil.gov.in/Users/login என்ற இணையத்திலும் புகார் தெரிவிக்கலாம், என்றார்.