ADDED : ஜன 05, 2024 05:37 AM
வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் கோயிலில், அஷ்டமி சப்பர உற்ஸவம் நடந்தது.
இதனை முன்னிட்டு நேற்று அதிகாலை 4:00 மணிக்கு கோயில் திறக்கப்பட்டு அம்மன் மற்றும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர் காலை 7:00 மணிக்கு சப்பர வீதி உலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் தேங்காய் உடைத்து வழிபட்டனர்.