/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/நெருங்கும் பொங்கல் பண்டிகை சூடுபிடிக்கும் வெல்லம், பனங்கிழங்கு விற்பனைநெருங்கும் பொங்கல் பண்டிகை சூடுபிடிக்கும் வெல்லம், பனங்கிழங்கு விற்பனை
நெருங்கும் பொங்கல் பண்டிகை சூடுபிடிக்கும் வெல்லம், பனங்கிழங்கு விற்பனை
நெருங்கும் பொங்கல் பண்டிகை சூடுபிடிக்கும் வெல்லம், பனங்கிழங்கு விற்பனை
நெருங்கும் பொங்கல் பண்டிகை சூடுபிடிக்கும் வெல்லம், பனங்கிழங்கு விற்பனை
ADDED : ஜன 13, 2024 04:47 AM

ஸ்ரீவில்லிபுத்தூர் : தைப்பொங்கல் திருநாள் நெருங்குவதை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் வெல்லம், பனங்கிழங்கு விற்பனை அதிகரித்து வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளான மம்சாபுரம், செண்பகத் தோப்பு, திருவண்ணாமலை, பிள்ளையார் நத்தம் உட்பட பல்வேறு இடங்களில் ஏராளமான பனை மரங்கள் உள்ளன.
இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் முதல் மாசி மாதம் வரை பனங்கிழங்கு விளைச்சல் அதிகளவு காணப்படும்.
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகவே பனங்கிழங்கு அறுவடை துவங்கி பஜார் வீதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இவற்றை விவசாயிகளே நேரடியாக பஜார் வீதிகளில் விற்று வருகின்றனர். வியாபாரிகள் மொத்தமாக வாங்கி வெளியூர்களுக்கு அனுப்புகின்றனர். இதில் தரம் வாரியாக 25 கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு ரூ,100 ரூ. 150, ரூ,180 வரையிலும், ரூ.250க்கும் விற்கப்படுகிறது. தற்போது விற்பனை அதிகரித்து வருவதாகவும், அடுத்த இரண்டு நாட்களில் விற்பனை சூடு பிடிக்கும் என்ற எதிர்பார்ப்புடன் விவசாயிகளும், வியாபாரிகளும் காத்திருக்கின்றனர்.
இதே போல் நகரில் வெல்லம் விற்பனையும் அதிகரித்து வருவதாக மொத்த விற்பனை கடைக்காரர்கள் தெரிவிக்கின்றனர். மழையின் காரணமாக மம்சாபுரம் பகுதியில் பெரும்பாலான கரும்பாலைகள் செயல்படாததால் வெல்லம் உற்பத்தி மிகவும் குறைவாக உள்ளது.
இதனால் உள்ளூர் தேவை மட்டும் இன்றி பல்வேறு வெளி மாவட்டங்களுக்கும், கேரள மாநிலம் புனலூர், கொல்லம், கொட்டாரக்கரை போன்ற நகரங்களுக்கும் தேவையான அளவுக்கு ஏற்றுமதி செய்ய முடியவில்லை என வியாபாரிகள் வேதனையடைந்துள்ளனர். மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் விதத்தில் தற்போது சேலம், நாமக்கல் பகுதியில் இருந்து வெல்லம் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் கடந்த ஆண்டை விட தற்போது ஒரு கிலோவிற்கு ரூ.10 அதிகரித்து ஒரு கிலோ வெல்லம் ரூ.55 முதல் 60 வரை விற்கப்படுகிறது.
WW