ADDED : ஜன 06, 2024 05:17 AM
சிவகாசி: விருதுநகர் மேற்கு மாவட்டஅ.தி.மு.க., வில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி விருதுநகர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற இணைச்செயலாளராக ஆழ்வார்ராமானுஜம், ஜெ.பேரவை மாவட்ட தலைவராக கரைமுருகன், மாவட்ட துணை செயலாளர்களாக சீனிவாசபெருமாள், கார்த்திக், செல்வகுமரன், கனேஷ்பாண்டியன், மேற்கு ஒன்றிய மகளிர் அணி செயலாளராக முத்துவள்ளி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் ராஜபாளையம் ஒன்றியம் வடக்கு, தெற்கு, மேற்கு என 3 ஆகவும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம் வடக்கு, தெற்கு, கிழக்கு என 3 ஆகவும் பிரிக்கப்பட்டு ஒன்றிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வத்ராயிருப்பு, விருதுநகர் ஒன்றியங்களும் பிரிக்கப்பட்டு ஒன்றிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.