/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/வி.ஏ.ஓ.,விற்காக காத்திருக்கும் அங்கன்வாடி ரேஷன் கட்டடங்கள்----:- தீர்வுக்கு எதிர்பார்ப்புவி.ஏ.ஓ.,விற்காக காத்திருக்கும் அங்கன்வாடி ரேஷன் கட்டடங்கள்----:- தீர்வுக்கு எதிர்பார்ப்பு
வி.ஏ.ஓ.,விற்காக காத்திருக்கும் அங்கன்வாடி ரேஷன் கட்டடங்கள்----:- தீர்வுக்கு எதிர்பார்ப்பு
வி.ஏ.ஓ.,விற்காக காத்திருக்கும் அங்கன்வாடி ரேஷன் கட்டடங்கள்----:- தீர்வுக்கு எதிர்பார்ப்பு
வி.ஏ.ஓ.,விற்காக காத்திருக்கும் அங்கன்வாடி ரேஷன் கட்டடங்கள்----:- தீர்வுக்கு எதிர்பார்ப்பு
ADDED : ஜன 01, 2024 04:56 AM
ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே ஆண்டுக் கணக்கில் அரசிடம் புதிய கட்டடக் கோரிக்கையை வைத்து எதிர்பார்க்கும் மக்கள், வி.ஏ.ஓ.,வால் காத்திருக்கும் சூழலுக்கு உள்ளாவதாக தெரிவிக்கின்றனர்.
ராஜபாளையம் சஞ்சீவி மலை அருகே தெற்கு வெங்காநல்லுார் ஊராட்சிக்குட்பட்ட 4வது வார்டில் ரேஷன் கடை, சத்துணவு மையம் ஆண்டுக் கணக்கில் பாழடைந்த நிலையில் உள்ளது.
இப்பகுதியை சேர்ந்தவர்கள் தொடர் கோரிக்கையை அடுத்தும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் ரேஷன் கட்டடத்தை மட்டும் வாடகை பகுதிக்கு மாற்றி உள்ளனர். அங்கன்வாடி அதே நிலையில் செயல்பட்டு வருகிறது.
இப்பகுதியை சேர்ந்த 30 குழந்தைகள் படித்து வரும் நிலையில் விபத்து ஏற்படும் முன் ஆபத்தான கட்டடத்திற்கு தீர்வு காணப்பட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து வார்டு உறுப்பினர் பஞ்சவர்ணம்:
ரேஷன் கடையில் இ.எஸ்.ஐ காலனி, லீலாவதி நகர், இந்திரா நகர், கக்கன் நகர் உள்ளிட்ட பகுதி மக்கள் 750 பயனாளிகள் உள்ளனர். ரேஷன் கடை சேதத்தால் இரண்டு வருடமாக வாடகை கட்டடத்தில் இயங்கிவருகிறது.
ஆனால் பாதிக்கப்பட்ட அங்கன்வாடிக்கு இதுவரை தீர்வு இன்றி உள்ளது. கலெக்டரிடம் கோரிக்கைக்கு பின் பி.டி.ஓ., பார்வையிட்டு ஒப்புதலுக்கு தயாரான நிலையில் வி.ஏ.ஓ., வினால் தாமதம் ஆவது வருத்தமளிக்கிறது.
வசந்தகுமார், பி.டி.ஓ.,:
ஊராட்சி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இன்ஜினியர் மதிப்பீட்டிற்கு தயார் நிலையில் உள்ளது. நில அமைவிடம் குறித்த வி.ஏ.ஓ.,வின் 10:1 அடங்கலுக்காக காத்திருக்கிறோம். தொடர் முகாம் பணிகளை காரணம் காட்டி உள்ளார். விரைவில் பணிகள் தொடங்கும்.