Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/பாதுகாப்பற்ற ஊருணி, சேதமான சமுதாயக்கூடம்

பாதுகாப்பற்ற ஊருணி, சேதமான சமுதாயக்கூடம்

பாதுகாப்பற்ற ஊருணி, சேதமான சமுதாயக்கூடம்

பாதுகாப்பற்ற ஊருணி, சேதமான சமுதாயக்கூடம்

ADDED : பிப் 06, 2024 12:14 AM


Google News
Latest Tamil News
காரியாபட்டி: பள்ளி அருகே பாதுகாப்பற்ற ஊருணி, சேதமான சமுதாய கூடம், குப்யைால் வாறுகாலில் தேங்கும் கழிவுநீர் போன்றவற்றால் தண்டியனேந்தல் ஊராட்சிமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

காரியாப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தண்டியனேந்தல் ஊராட்சியில் சரிவர வாறுகால் வசதி கிடையாது. இருக்கிற வாறுகாலில் குப்பைகளை கொட்டியதால் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் ஏற்படுகிறது. கொசு கடிக்கிறது. தரை தள தொட்டியிலிருந்து வெளியேறும் கழிவு நீர் தேங்கி நிற்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. ரோட்டோரத்தை ஆக்கிரமித்துள்ளதால் மழை நேரங்களில் மழை நீர் வீடுகள் முன் தேங்குகிறது. பள்ளி அருகே பாதுகாப்பற்ற நிலையில், ஊருணி உள்ளதால் மாணவர்கள் தவறி விழும் அபாயம் உள்ளது. ஏற்கனவே இரு குழந்தைகள் தவறி விழுந்து இறந்துள்ளன. இங்குள்ள நிழற்குடை சேதமடைந்து உள்ளதால் மழை, வெயிலுக்கு ஒதுங்க முடியவில்லை. மயானத்திற்கு ரோடு, அடிப்படை வசதி கிடையாது.

இவ்வூராட்சிக்குட்ப்பட்ட பெரியபுளியம்பட்டியில் போதிய வாறுகால் வசதி கிடையாது. சுகாதார வளாகம் இல்லாததால் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். சமுதாய கூடம், நாடக மேடை 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. தற்போது சேதம் அடைந்துள்ளது. மயானத்திற்கு ரோடு, அடிப்படை வசதி கிடையாது. அய்யனார் கோயிலுக்கு செல்ல ரோடு வசதி கிடையாது . பள்ளி கூடம் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.

ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும்


பாண்டி, தனியார் ஊழியர், தண்டியனேந்தல்:

ரோட்டோர ஆக்கிரமிப்புகளால் மழை நீர் செல்ல வழி இன்றி தேங்கி, பாதிப்பை ஏற்படுத்துகிறது. வாறுகாலில் குப்பைகளை கொட்டி அடைத்துள்ளதால் கழிவுநீர் செல்ல வழி இல்லை. கொசு உற்பத்திக்கு வழிவகுக்கிறது.

ஆக்கிரமிப்புகளை அகற்றி, கழிவு நீர் எளிதில் செல்ல வாறுகால் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆபத்தான நிழற்குடையால் அச்சம்


கூடலிங்கம், விவசாயி, தண்டியனேந்தல்:

30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட நிழற்குடை சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. விபத்து ஏற்படுமுன் அப்புறப்படுத்தி புதிய நிழற்குடை கட்ட வேண்டும். பள்ளி முன் உள்ள ஊருணி 15 மீட்டர் ஆழமுள்ளது. சுற்றுச்சுவர் இல்லாததால், மாணவர்கள் தவறி விழும் அபாயம் உள்ளது.

விபத்திற்கு முன் சுற்றுச் சுவர் கட்ட வேண்டும். மயானத்திற்கு ரோடு, அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். வாறுகால் வசதி செய்து, பள்ளியில் உள்ள ஓட்டு கட்டடத்தை அப்புறப்படுத்த வேண்டும்.

சுகாதார வளாகம் வேண்டும்


சின்ன வீரன், விவசாயி, பெரிய புளியம்பட்டி:

சேதமடைந்துள்ள சமுதாயக்கூடம், நாடக மேடையை பராமரிப்பு செய்ய வேண்டும். திறந்தவெளியை பயன்படுத்தி வருவதால் சுகாதார வளாகம் கட்ட வேண்டும். ரோடு வசதி இல்லாத மயானத்திற்கு ரோடு வசதி, அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். அய்யனார் கோயில் செல்லும் ரோடு சீரமைத்து தெரு விளக்கு அமைத்து தர வேண்டும்.

சேதமடைந்து வரும் மல்லாங்கிணர் புளியம்பட்டி ரோடை சீரமைக்க வேண்டும். பள்ளிக்கூடம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தீர்மானம் நிறைவேற்றப்பட்டது


மாரியம்மாள், ஊராட்சித் தலைவி, தண்டியனேந்தல்: சுற்றுச்சுவர், நிழற்குடை, வாறுகால், மயானத்திற்கு ரோடு வசதி, பெரிய புளியம்பட்டியில் சுகாதார வளாகம், வாறுகால், மயான ரோடு வசதி என பல்வேறு தேவைகளை நிறைவேற்ற கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விரைவில் அனைத்திற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us