ADDED : பிப் 24, 2024 05:47 AM
திருச்சுழி : திருச்சுழி நுாலகத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு வகுப்புகள் நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.
நுாலகர் பாஸ்கரன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் சுந்தர் அழகேசன் முன்னிலை வகித்தார். தேர்வுக்கு விண்ணப்பம் செய்து இருக்கும் மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்குவது, அனுபவம் மிக்க ஆசிரியர்களை கொண்டு பாடம் எடுப்பது, போட்டி தேர்வில் வெற்றி பெற்று அரசு பணியில் இருக்கும் அலுவலர்களின் உதவியோடு வகுப்புகள் நடத்துவது குறித்து ஆலோசனைகள் செய்யப்பட்டது. புரவலர்செல்வமுருகன் நூலகத்திற்கு மைக் ஸ்டாண்ட் வழங்கினார்.