Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சூரிய ஒளி மின்சாரத்தை பயன்படுத்த அறிவுரை

சூரிய ஒளி மின்சாரத்தை பயன்படுத்த அறிவுரை

சூரிய ஒளி மின்சாரத்தை பயன்படுத்த அறிவுரை

சூரிய ஒளி மின்சாரத்தை பயன்படுத்த அறிவுரை

ADDED : ஜூன் 20, 2025 11:54 PM


Google News
விருதுநகர்: விருதுநகர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் லதா செய்திக்குறிப்பு: மதிய நேரங்களில் இலவசமாக கிடைக்கும் புதுப்பிக்க கூடிய இயற்கை வளமான சூரிய மின் ஆற்றலை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் சூரிய ஒளி மின்சாரத்தை அதிகமாக பயன்படுத்துவதன் மூலம் பசுமை ஆற்றல் திட்டங்களை ஊக்குவிப்பதோடு, மற்ற வளங்ளை கொண்டு மின்னாற்றலை தயாரிக்கும் போது ஏற்படும் மாசுபாட்டின் அளவை குறைக்க முடியும்.

இதன் மூலம் நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதையில் முன்னேறிடும். எனவே மதியம் அதிகளவில் அளவில் தயாரிக்கப்படும் சூரிய ஒளி மின்சாரத்தை முழுமையாக பயன்படுத்திட அனைத்து விவசாயிகளும் முடிந்த வரை தங்களது விவசாய மின்மோட்டார்களை சூரிய ஒளி மின்சாரத்தில் பயன்படுத்த முன்வர வேண்டும், என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us