/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சாத்துார் ரயில்வே ஸ்டேஷனில் கூடுதல் டிக்கெட் கவுண்டர் அவசியம் சாத்துார் ரயில்வே ஸ்டேஷனில் கூடுதல் டிக்கெட் கவுண்டர் அவசியம்
சாத்துார் ரயில்வே ஸ்டேஷனில் கூடுதல் டிக்கெட் கவுண்டர் அவசியம்
சாத்துார் ரயில்வே ஸ்டேஷனில் கூடுதல் டிக்கெட் கவுண்டர் அவசியம்
சாத்துார் ரயில்வே ஸ்டேஷனில் கூடுதல் டிக்கெட் கவுண்டர் அவசியம்
ADDED : மார் 23, 2025 04:32 AM
சாத்துார் : சாத்துார் ரயில்வே ஸ்டேஷனில் கூடுதல் டிக்கெட் கவுண்டர் திறக்க வேண்டுமென பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
சாத்துார் ரயில்வே ஸ்டேஷனில் 20க்கும் மேற்பட்ட ரயில்கள் நின்று செல்கின்றன. திருப்பதி மும்பை டெல்லி காஷ்மீர் என வெளி மாநிலங்களுக்கு செல்லும் பலரும் சாத்துார் ரயில்வே ஸ்டேஷன் வந்து ரயில் ஏறி செல்கின்றனர்.
குறிப்பாக வெம்பக்கோட்டை தாலுகாவில் வசிக்கும் பலரும் சாத்துார் ரயில்வே ஸ்டேஷன் வந்து வெளியூருக்கு செல்கின்றனர் . இந்த நிலையில் ரயில்வே ஸ்டேஷனில் ஒரே ஒரு டிக்கெட் கவுண்டர் மட்டுமே செயல்பட்டு வருகிறது.
முன்பதிவு செய்யும் கவுண்டர் திறக்கப்படுவதில்லைமேலும் தக்கல் டிக்கெட் எடுப்பவர்கள் பொதுப் பெட்டியில் பயணம் செய்பவர்கள் டிக்கெட் எடுக்கும் பொழுது காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
காலதாமதத்தால் தக்கல் டிக்கெட் கிடைக்காமல் பலரும் அவதிப்படுகின்றனர். தினமும் நுாற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் ரயில்வே ஸ்டேஷனில் கூடுதலாக ஒரு டிக்கெட் கவுண்டர் அமைப்பதன் மூலம் பயணிகள் எளிதில் டிக்கெட் எடுக்க முடியும் மேலும் இங்குள்ள தொடுதிரை கணினியும் செயல்படாமல் உள்ளது.
இதனால் ரயில்களின் இருக்கை பற்றிய விவரம் தெரியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே பயணிகள் வசதி கருதி தொடுதிரை கணினியை கொண்டு வரவும் கூடுதல் டிக்கெட் கவுண்டர் திறக்கவும் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.