ADDED : செப் 20, 2025 11:18 PM
ராஜபாளையம்: ராஜபாளையம் நகர் பகுதி நடுவே செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சேர்ந்துள்ள மணல் குவியலால் வாகன ஓட்டிகளுக்கு அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன.
ராஜபாளையம் நகர் பகுதி நடுவே திருமங்கலம்- - கொல்லம் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.
இச்சாலையில் சிறிது சிறிதாக சேர்ந்துள்ள மணலை அப்புறப்படுத்தாததால் சாலை நடுவிலும், இரண்டு பக்க ஓரங்களிலும் மண் குவியலாக பரவி கிடைக்கிறது. இப்பகுதியை கடந்து செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
நகர் பகுதி முழுவதும் மாஸ் கிளீனிங் நடைபெற்று வரும் வேலையில் மெயின் ரோட்டை கண்டுகொள்ளாமல் விட்டுள்ளனர்.
இதனால் கனரக வாகனங்கள் வேகமாக செல்லும்போது சாலையில் உள்ள மணல் காற்றில் பறந்து வாகன ஓட்டிகளுக்கும் சாலையில் இருப்பவருக்கும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.
தினமும் இப்பொழுதியை கடந்து செல்லும் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து குவிந்து கிடக்கும் மணல் குவியலை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.