/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/போக்குவரத்து விதிமீறல் 49 ஆயிரம் வழக்குகள் பதிவுபோக்குவரத்து விதிமீறல் 49 ஆயிரம் வழக்குகள் பதிவு
போக்குவரத்து விதிமீறல் 49 ஆயிரம் வழக்குகள் பதிவு
போக்குவரத்து விதிமீறல் 49 ஆயிரம் வழக்குகள் பதிவு
போக்குவரத்து விதிமீறல் 49 ஆயிரம் வழக்குகள் பதிவு
ADDED : ஜன 06, 2024 05:17 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் சப் டிவிஷனில் கூமாபட்டி, வத்திராயிருப்பு, நத்தம் பட்டி, கிருஷ்ணன் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், வன்னியம்பட்டி, மல்லி, மம்சாபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, போக்குவரத்து காவல்துறை என 10 ஸ்டேஷன்களில்
தினமும் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
2023ல் ஹெல்மெட் அணியாமல் டூ வீலர் ஒட்டியதாக 19 ஆயிரத்து 600 வழக்குகள், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 694 வழக்குகளும், டூவீலரில் மூன்று பேர் பயணித்ததாக 1200 வழக்குகள், உட்பட பல்வேறு விதிமீறல் தொடர்பாக சுமார் 49 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக 90க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஆயிரத்து 500 கிலோவிற்கும் மேற்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.