/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/40 ஆண்டுகளாக தூர்வாராதது, கரை, மடை சேதம்40 ஆண்டுகளாக தூர்வாராதது, கரை, மடை சேதம்
40 ஆண்டுகளாக தூர்வாராதது, கரை, மடை சேதம்
40 ஆண்டுகளாக தூர்வாராதது, கரை, மடை சேதம்
40 ஆண்டுகளாக தூர்வாராதது, கரை, மடை சேதம்
ADDED : ஜன 11, 2024 04:35 AM

காரியாபட்டி : காரியாபட்டி வரலொட்டியில் ஊராட்சி ஒன்தியத்திற்குட்பட்ட இக்கண்மாய் 70 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. 2 மடைகள் உள்ளன. 150 க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் விவசாயம் நடைபெறும்.
நீர்வரத்து ஆதாரமாக மாந்தோப்பு, துலுக்கன்குளம், அழகியநல்லூர், மல்லாங்கிணர் உள்ளிட்ட காட்டுப்பகுதியில் பெய்யும் மழை நீர், வரத்து ஓடைகள் வழியாக கண்மாய்க்கு வந்து சேரும். சிறிய மழை பெய்தால் கூட இக்கண்மாய்க்கு தண்ணீர் வரும். இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறையாது. நெல் விவசாயம் தொடர்ந்து நடைபெற்றது. நாளடைவில் மழை குறைவானதால் வரத்து ஓடைகள் ஆக்கிரமிப்பால் காணாமல் போயின. கண்மாய்க்கு தண்ணீர் வரத்து குறைந்தது. விவசாயம் பாதிக்கப்பட்டது. வயல்கள் தரிசு நிலங்களாகின.
கண்மாய் தூர்வாரி 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகின. இக்கண்மாயிலுள்ள மடைகள், கரைகள் முற்றிலும் சேதமாகின. சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து கண்மாய் இருக்கும் இடம் தெரியாமல் உள்ளது. குப்பை கொட்டி வருகின்றனர். கரைகள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன.
கண்மாயை தூர்வார நடவடிக்கை எடுக்காததால் விவசாயம் செய்ய முடியாமல் தரிசு நிலங்களாகி சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதால், விவசாயிகள் வேதனை அடைந்தனர். வரத்துக் கால்வாயை சீரமைத்து, கண்மாயை தூர்வாரி, சேதம் அடைந்துள்ள மடைகளை சீரமைத்து, கரையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, கரையை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.