ADDED : பிப் 11, 2024 12:40 AM
சாத்துார்: சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது டூவீலர் மோதிய விபத்தில் 4 பேர் காயமடைந்தனர்.
சிப்பிப்பாறையை சேர்ந்தவர்கள் சீனி 45, எட்டப்பன் 55, ஆகியோர் பாத யாத்திரையாக இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு பிப்.8 மாலை 6:00 மணிக்கு நடந்து சென்றனர்.
ஆட்டுப்பண்ணைக்கு எதிரில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவர்கள் பின்னால் வந்த டூவீலர் இருவர் மீதும் மோதியது. இதில் இருவரும் காயம் அடைந்தனர்.
டூவீலரை ஓட்டி வந்த (ஹெல்மெட் அணியவில்லை) நத்தத்துபட்டியை சேர்ந்த மருது பாண்டி 35, அவர் பின்னால் உட்கார்ந்து வந்த மாரி கண்ணு மகன் ராஜகோபாலன் 18, ஆகியோரும் காயமடைந்தனர்.
அம்மாபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.