/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/சரக்கு வாகனம் கவிழ்ந்து 17 பேர் காயம்சரக்கு வாகனம் கவிழ்ந்து 17 பேர் காயம்
சரக்கு வாகனம் கவிழ்ந்து 17 பேர் காயம்
சரக்கு வாகனம் கவிழ்ந்து 17 பேர் காயம்
சரக்கு வாகனம் கவிழ்ந்து 17 பேர் காயம்
ADDED : பிப் 11, 2024 12:39 AM

திருச்சுழி: திருச்சுழி அருகே விவசாய பணிக்கு சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 17 பேர் காயமடைந்தனர்.
திருச்சுழி அருகே சாமிநத்தத்தை சேர்ந்தவர் நாகஜோதி 60, கூலி வேலை செய்து வருகிறார்.
இவரது குடும்பத்தாரை, பனையூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வி விவசாய வேலைக்கு அழைத்தார். இவர்களுடன் சாமி நத்தத்தைச் சேர்ந்த 21 நபர்களுடன் சரக்கு வாகனத்தில், நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு அருப்புக்கோட்டை - சாயல்குடி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். பரளச்சி மின் வாரிய அலுவலகம் முன்பு, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் கவிழ்ந்தது. இதில் வைரமுத்து 52, காளியம்மாள் 65, பாப்பா 70, பெரிய நாச்சியார் 30, உட்பட 17 பேர் காயமடைந்து, அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பரளச்சி போலீசார் டிரைவர் மலைச்சாமி 38,யை கைது செய்து விசாரிக்கின்றனர்.- - -