ஆட்டு கிடையில் தீ 17 குட்டிகள் பலி
ஆட்டு கிடையில் தீ 17 குட்டிகள் பலி
ஆட்டு கிடையில் தீ 17 குட்டிகள் பலி
ADDED : பிப் 11, 2024 01:28 AM

விருதுநகர்:விருதுநகர் அருகே தவசிலிங்காபுரத்தில் ஆட்டுக்கிடையில் ஏற்பட்ட தீயில் 17 ஆட்டு குட்டிகள் கருகி பலியாகின.
விருதுநகர் அருகே வடிவேல் கரையின் மலையான் நகரைச் சேர்ந்தவர் சங்கர். ஆடு வளர்த்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் பிறந்த ஒரு மாதங்களே ஆன ஆட்டுக்குட்டிகளை வளர்ப்பதற்காக தவசிலிங்காபுரத்தைச் சேர்ந்த பெருமாள், நிலத்தில் ஆட்டுக்கிடை அமைத்திருந்தார்.
தை அமாவசையை முன்னிட்டு நேற்று முன்தினம் மதியம் 3:00 மணிக்கு விரதம் முடித்து சாப்பிட சென்றார். மாலை 6:00 மணிக்கு ஆட்டு குட்டிகள் அடைக்கப்பட்டிருந்த கிடை திடீரென தீப்பிடித்து எரிந்து அதில் இருந்த 17 குட்டிகளும் கருகி பலியானது. தீ விபத்திற்கான காரணம் குறித்து ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.