/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ லேப்டாப்பில் சார்ஜ் ஏற்றும் போது மின்சாரம் பாய்ந்து பெண் பலி லேப்டாப்பில் சார்ஜ் ஏற்றும் போது மின்சாரம் பாய்ந்து பெண் பலி
லேப்டாப்பில் சார்ஜ் ஏற்றும் போது மின்சாரம் பாய்ந்து பெண் பலி
லேப்டாப்பில் சார்ஜ் ஏற்றும் போது மின்சாரம் பாய்ந்து பெண் பலி
லேப்டாப்பில் சார்ஜ் ஏற்றும் போது மின்சாரம் பாய்ந்து பெண் பலி
ADDED : ஜூன் 15, 2024 02:10 AM

ராஜபாளையம்:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சேத்துார் அருகே லேப்டாப்பில் சார்ஜ் ஏற்றிய போது மின்சாரம் தாக்கி செந்தில் மயில் 23, பலியானார்.
சேத்துார் அருகே சொக்கநாதன் புத்துார் கிருஷ்ணன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சக்தி குமார். இவரது மகள் செந்தில் மயில்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த ராஜாராமுடன் திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை. திருமணத்திற்கு பின் மனைவியை அவரது வீட்டில் விட்டு விட்டு சவுதி அரேபியாவில் இன்ஜினியராக ராஜாராம் வேலை செய்து வருகிறார்.
நேற்று மாலை 4:00 மணியளவில் செந்தில் மயில் லேப்டாப்பில் சார்ஜ் ஏற்ற இணைப்பு கொடுத்த போது மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டு மயங்கி கிடந்தார்.
சிவகிரி அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். சேத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.