/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ கட்டட அனுமதியின்றி கட்டிய பள்ளி கல்லுாரிகள் மீது நடவடிக்கை என்ன கட்டட அனுமதியின்றி கட்டிய பள்ளி கல்லுாரிகள் மீது நடவடிக்கை என்ன
கட்டட அனுமதியின்றி கட்டிய பள்ளி கல்லுாரிகள் மீது நடவடிக்கை என்ன
கட்டட அனுமதியின்றி கட்டிய பள்ளி கல்லுாரிகள் மீது நடவடிக்கை என்ன
கட்டட அனுமதியின்றி கட்டிய பள்ளி கல்லுாரிகள் மீது நடவடிக்கை என்ன
ADDED : ஜூன் 19, 2024 04:47 AM
அருப்புக்கோட்டை : ஊராட்சிக்குட்பட்ட பள்ளிகள் கல்லூரிகள் கட்டட பிளான் இன்றியும் வரி கட்டாமலும் உள்ளதால் ஊராட்சி மூலம் நோட்டீஸ் அனுப்பியும் பயனில்லாததால் அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுக்க போகிறீர்கள் என அருப்புக்கோட்டை ஒன்றிய கூட்டத்தில் கவுன்சிலர் கேள்வி எழுப்பினார்.
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய கூட்டம் ஒன்றிய குழு தலைவர் சசிகலா தலைமையில் நடந்தது. பி.டி.ஓ.க்கள் சீனிவாசன், ரவி, கவுன்சிலர்கள், துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்
கூட்டத்தில் நடந்த விவாதங்கள்
கோவிந்தசாமி, (திமு.க.,): பாலையம்பட்டி விரிவாக்க பகுதியில் 12அடி உள்ள ஓடை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டடங்களாக உள்ளது அகற்ற நடவடிக்கை எடுங்கள்.டி.எஸ்.பி., அலுவலகம் சந்திப்பு ரோட்டில் ஹைமாஸ் விளக்கு பொருத்துங்கள். பாலையம்பட்டியில் இ - சேவை மைய கட்டிடம் கட்டி 7 ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது.கட்டடமும் சேதம் அடைந்து வருகிறது. மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வாருங்கள்.
வாழவந்தராஜ், (தி.மு.க.,): அருப்புக்கோட்டை -சுக்கில நத்தம் ரோட்டில் உள்ள உரக்கிடங்கின் அருகில் ரைஸ் மில்களின்சாம்பல் கழிவுகளை குவியலாக கொட்டியுள்ளனர். இதனால் இந்த ரோடு வழியாக செல்லும் வாகன ஓட்டிகளின் கண்ணில் பட்டு தடுமாறி செல்ல வேண்டியுள்ளது.சுக்கிலநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட மதுரை -தூத்துக்குடி நான்கு வழி ரோட்டில் அமைந்துள்ள பள்ளிகள், கல்லூரிகள், ஓட்டல்கள் கட்டட அனுமதி பெறாமலும் 6 ஆண்டுகளாக வரி செலுத்தாமல் உள்ளனர்.
ஊராட்சி மூலம் நோட்டீஸ் அனுப்பியும் பயனில்லை. அதிகாரிகள் தான் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு விவாதங்கள் நடந்தது.