Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ கழிவுகளால் சுகாதாரக்கேடு, செயல்படாத வணிக வளாகம்; சிரமத்தில் வத்திராயிருப்பு பேரூராட்சி 8வது வார்டு மக்கள்

கழிவுகளால் சுகாதாரக்கேடு, செயல்படாத வணிக வளாகம்; சிரமத்தில் வத்திராயிருப்பு பேரூராட்சி 8வது வார்டு மக்கள்

கழிவுகளால் சுகாதாரக்கேடு, செயல்படாத வணிக வளாகம்; சிரமத்தில் வத்திராயிருப்பு பேரூராட்சி 8வது வார்டு மக்கள்

கழிவுகளால் சுகாதாரக்கேடு, செயல்படாத வணிக வளாகம்; சிரமத்தில் வத்திராயிருப்பு பேரூராட்சி 8வது வார்டு மக்கள்

ADDED : மார் 12, 2025 06:34 AM


Google News
வத்திராயிருப்பு; வடக்கு அக்ரஹார தெருவின் பின்பகுதியில் அசுத்தங்கள் காணப்படுவதால் மக்கள் பயன்படுத்த முடியாத நிலை, பல ஆண்டுகளாக செயல்படாத வணிக வளாகம், வாறுகால்களில் தேங்கும் கழிவுகளால் சுகாதாரக்கேடு போன்ற குறைபாடுகளுடன் வத்திராயிருப்பு பேரூராட்சி 8வது வார்டு மக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

மேலப்பாளையம் வடக்கு தெருவின் ஒரு பகுதி, சுப்புராயர் தெரு, வடக்கு அக்ரஹாரம் தெரு, பவுண்ட் ரோடு, வத்திராயிருப்பு மெயின் ரோடு தெற்கு பகுதிகளை கொண்டது இந்த வார்டு.

இந்த வார்டின் அனைத்து தெருக்களிலும் பேவர் பிளாக் ரோடுகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு சில பகுதிகளில் அமைக்கப்படாமல் உள்ளது.

வடக்கு அக்ரஹார தெருவின் பின்பகுதியில் செடி,கொடிகள் வளர்ந்தும், கழிவுகள் கொட்டப்பட்டும் அசுத்தமான நிலையில் காணப்படுகிறது.

மெயின் ரோட்டின் தெற்கு பகுதியில் உள்ள வாறுகால்களில் கழிவுகள் தேங்கி சுகாதாரக்கேடு காணப்படுகிறது. இதனால் கொசு தொல்லையால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

மெயின் ரோட்டில் இருந்து மேலப்பாளையம் தெருவிற்கு செல்லும் ரோட்டில் வணிக வளாகம் பல ஆண்டுகளாக செயல்படாமல் முடங்கி கிடக்கிறது.

தினசரி துப்புரவு பணி செய்தல், வாரம் ஒரு முறையாவது தாமிரபரணி குடிநீர் வழங்குதல், விடுபட்ட மின்கம்பங்களில் தெருவிளக்குகள் அமைத்தல் போன்ற குறைகளை சரி செய்து தர பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வார்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

வாறுகால் கழிவுகள்


விக்னேஷ், குடியிருப்பாளர்: வடக்கு அக்ரஹார தெருவின் பின் பகுதியில் பல ஆண்டுகளாக காணப்படும் கழிவுகளை அகற்றி சுத்தப்படுத்த வேண்டும்.

இங்கு பேவர் பிளாக் ரோடு அமைத்து மின் கம்பங்களில் மின் விளக்குகள் பொருத்தி மக்கள் வந்து செல்லும் பாதையாக மாற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மூடி கிடக்கும் வணிக வளாகம்


-நந்தகுமார், குடியிருப்பாளர்: நாடார் பஜாரில் இருந்து மேலப்பாளையம் தெருவுக்கு செல்லும் வழியில் உள்ள வணிக வளாகம் பல ஆண்டுகளாக மூடி கிடக்கிறது. இதனை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

பேரூராட்சியில் கோரிக்கை


ராஜேஸ்வரி, வார்டு உறுப்பினர்: வார்டின் மெயின் தெருக்களில் பேவர் பிளாக் ரோடுகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் குறுகிய சந்துகளிலும் பேவர் பிளாக் ரோடுகள் அமைத்தல், விடுபட்ட பகுதிகளில் மின்விளக்குகள் பொருத்துதல், சுப்பராயர் தெருவில் வாறுகால் பாலம் அமைத்தல், வடக்கு அக்ரஹாரம் தெருவின் பின்பகுதியை சீரமைத்தல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை பேரூராட்சியின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளேன்.

இதில் சில கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வாறுகால் கழிவுகள்

வடக்கு அக்ரஹார தெருவின் பின் பகுதியில் பல ஆண்டுகளாக காணப்படும் கழிவுகளை அகற்றி சுத்தப்படுத்த வேண்டும். இங்கு பேவர் பிளாக் ரோடு அமைத்து மின் கம்பங்களில் மின் விளக்குகள் பொருத்தி மக்கள் வந்து செல்லும் பாதையாக மாற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-விக்னேஷ், குடியிருப்பாளர்........................மூடி கிடக்கும் வணிக வளாகம் நாடார் பஜாரில் இருந்து மேலப்பாளையம் தெருவுக்கு செல்லும் வழியில் உள்ள வணிக வளாகம் பல ஆண்டுகளாக மூடி கிடக்கிறது. இதனை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.- நந்தகுமார், குடியிருப்பாளர்..................பேரூராட்சியில் கோரிக்கை வார்டின் மெயின் தெருக்களில் பேவர் பிளாக் ரோடுகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் குறுகிய சந்துகளிலும் பேவர் பிளாக் ரோடுகள் அமைத்தல், விடுபட்ட பகுதிகளில் மின்விளக்குகள் பொருத்துதல், சுப்பராயர் தெருவில் வாறுகால் பாலம் அமைத்தல், வடக்கு அக்ரஹாரம் தெருவின் பின்பகுதியை சீரமைத்தல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை பேரூராட்சியின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளேன். இதில் சில கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.- ராஜேஸ்வரி, வார்டு உறுப்பினர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us