/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ திறந்த வெளியில் சமுதாய கிணறு; விபத்து அபாயம் திறந்த வெளியில் சமுதாய கிணறு; விபத்து அபாயம்
திறந்த வெளியில் சமுதாய கிணறு; விபத்து அபாயம்
திறந்த வெளியில் சமுதாய கிணறு; விபத்து அபாயம்
திறந்த வெளியில் சமுதாய கிணறு; விபத்து அபாயம்
ADDED : மார் 12, 2025 06:35 AM
திருச்சுழி; திருச்சுழி அருகே எம்.ரெட்டியபட்டியில் திறந்தவெளியில் சமுதாய கிணறு இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் மூடியிட்டு பாதுகாக்க வேண்டும்.
எம்.ரெட்டியபட்டியில் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி அருகில் திறந்த வெளியில் சமுதாய கிணறு உள்ளது. முன்பு இது குடிநீருக்காக ஊருக்கு பயன்பட்டது.
தற்போது தண்ணீர் இன்றி பயன்படுத்தப்படாமலும், மூடிட்டு பாதுகாப்பில்லாமல் திறந்தவெளியில் இருப்பதால் இரவு நேரங்களில் யாராவது விழுந்து விடும் அபாயத்தில் உள்ளது.
அருகில் மாணவர் விடுதி இருப்பதாலும், மெயின் ரோடு அருகில் உள்ளதாலும் கிணற்றை பாதுகாப்பாக மூடி வைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.