/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ கடன் வசூலிக்க வர வேண்டாம் கிராம மக்கள் அறிவிப்பு பலகை கடன் வசூலிக்க வர வேண்டாம் கிராம மக்கள் அறிவிப்பு பலகை
கடன் வசூலிக்க வர வேண்டாம் கிராம மக்கள் அறிவிப்பு பலகை
கடன் வசூலிக்க வர வேண்டாம் கிராம மக்கள் அறிவிப்பு பலகை
கடன் வசூலிக்க வர வேண்டாம் கிராம மக்கள் அறிவிப்பு பலகை
ADDED : ஜூன் 07, 2024 07:29 PM

சிவகாசி:விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மீனம்பட்டியில் பட்டாசு தொழில் முடக்கப்பட்டுள்ளதால் கடன்காரர்கள், குழுக்காரர்கள் யாரும் கடன் வசூலிக்க வேண்டாம் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
சிவகாசி பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமே பட்டாசு, அச்சு தொழில்கள் தான். இந்நிலையில் இப்பகுதியில் பட்டாசு ஆலைகளில் தொடரும் ஆய்வுகளால் பல ஆலைகள் பூட்டப்பட்டு தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். இதனால் தொழிலாளர்கள் வட்டிக்கு பணம் கடன் வாங்கி, வட்டியும் அசலும் கட்ட முடியாமல் அவதிப்படுகின்றனர். பலர் குடும்பம் குடும்பமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், மீனம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் பட்டாசு ஆலைகளில் வேலை வாய்ப்பை இழந்து, வருமானமின்றி தவிக்கின்றனர். இதனால் இவர்கள் வார, மாத வட்டிக்கு கடன் வாங்கி, பணத்தை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர்.
எனவே மீனம்பட்டியில் நாட்டாமை ஞானம், கணக்கர் பன்னீர்செல்வம் சார்பாக கிராமத்தின் நுழைவு வாயிலில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில், பட்டாசு தொழில் முடக்கப்பட்டுள்ள நிலையில் தற்சமயம் கிராம மக்களுக்கு சரிவர வேலை வாய்ப்பு இல்லாத காரணத்தால், கடன் கொடுத்தவர்கள் மற்றும் சுய உதவிக் குழுவினர்கள் ஜூலை 5 வரை, கடன் வசூலிக்க வேண்டாம்' என குறிப்பிடப்பட்டுள்ளது.