/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மழை பெய்தால் தீவு; சேற்றில் நடக்க முடியாமல் அவதி அருப்புக்கோட்டை நேதாஜி நகர் விரிவாக்க பகுதி மக்களின் அவலம் மழை பெய்தால் தீவு; சேற்றில் நடக்க முடியாமல் அவதி அருப்புக்கோட்டை நேதாஜி நகர் விரிவாக்க பகுதி மக்களின் அவலம்
மழை பெய்தால் தீவு; சேற்றில் நடக்க முடியாமல் அவதி அருப்புக்கோட்டை நேதாஜி நகர் விரிவாக்க பகுதி மக்களின் அவலம்
மழை பெய்தால் தீவு; சேற்றில் நடக்க முடியாமல் அவதி அருப்புக்கோட்டை நேதாஜி நகர் விரிவாக்க பகுதி மக்களின் அவலம்
மழை பெய்தால் தீவு; சேற்றில் நடக்க முடியாமல் அவதி அருப்புக்கோட்டை நேதாஜி நகர் விரிவாக்க பகுதி மக்களின் அவலம்
ரோடு அவசியம்
தமிழ்செல்வி, குடும்பத்தலைவி : நேதாஜி நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. முக்கிய பிரச்சனையே ரோடு தான். ரோடு இல்லாமல் இந்தப் பகுதி மக்கள் சிரமப்பட்டு செல்கின்றனர். மழை காலமானால் வெள்ளம் சூழ்ந்து தீவாக மாறி விடுகிறது. இந்த பகுதிக்கு ரோடு அமைத்து தர வேண்டும்.
தெருவிளக்கு அவசியம்
ரதி, குடும்பத்தலைவி: நேதாஜி எக்ஸ்டென்ஷன் பகுதி வழியாக செம்பட்டி, புலியூரான், ஆத்திப்பட்டி மற்றும் புறநகர் பகுதி மக்கள் வந்து செல்கின்றனர். இரவு பகல் எந்த நேரமும் ரோட்டில் வாகனங்கள் வந்து செல்லுகின்றன. இரவு நேரங்களில் திருவிளக்கு இல்லாமல் இந்த பகுதி முழுவதும் இருட்டாக இருக்கிறது. ரோடு இல்லாததால் மண்பாதையில் செல்ல மக்கள் சிரமப்படுகின்றனர். தெருவிளக்கு, ரோடும் அமைக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அடிப்படை வசதிகள் தேவை
பாண்டிமீனா, குடும்பத் தலைவி : நேதாஜி எக்ஸ்டென்ஷன் பகுதி உருவாகி 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. நகராட்சிக்கு உட்பட்ட பகுதியாக இருந்தும் இங்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை.