Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ டூ - வீலர் மீது லாரி மோதல் சிறுமி உட்பட இருவர் பலி

டூ - வீலர் மீது லாரி மோதல் சிறுமி உட்பட இருவர் பலி

டூ - வீலர் மீது லாரி மோதல் சிறுமி உட்பட இருவர் பலி

டூ - வீலர் மீது லாரி மோதல் சிறுமி உட்பட இருவர் பலி

ADDED : ஆக 04, 2024 10:36 PM


Google News
Latest Tamil News
காரியாபட்டி,:விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே இலுப்பகுளத்தைச் சேர்ந்த மணிகண்டன், 30, உறவினர் பாண்டீஸ்வரி, 35, அவரது மகள் தர்ஷினி, 12, ஆகியோர் டூ - வீலரில் மடப்புரம் கோவிலுக்கு சென்றனர். கஞ்சமநாயக்கன்பட்டி அருகே சென்றபோது பின்னால் வந்த செங்கல் ஏற்றிய லாரி டூ - வீலரை முந்த முயன்றது.

மேலும் எதிரில், தேசியனேந்தலைச் சேர்ந்த சிவப்புராஜா, 65, மேலக்கள்ளங்குலத்தைச் சேர்ந்த மொந்தஅம்பலம், 75, ஆகியோர் காரியாபட்டிக்கு டூ - வீலரில் சென்றனர். அப்போது முந்த முயன்ற செங்கல் லாரி அடுத்தடுத்து இரண்டு டூ - விலர்களில் மோதியதில், ஐந்து பேரும் துாக்கி வீசப்பட்டனர். இதில் தர்ஷினி, மொந்தஅம்பலம் சம்பவயிடத்திலேயே பலியாயினர்.

பலத்த காயம் அடைந்த மற்ற மூவரும், மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். தப்பிய லாரி டிரைவரை, ஆவியூர் போலீசார் தேடுகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us