ADDED : ஜூலை 15, 2024 06:27 AM
வத்திராயிருப்பு, : வத்திராயிருப்பு தாலுகா கூமாபட்டி ராமசாமியாபுரத்தை சேர்ந்தவர் வீரகுரு, 21, வாத்து மேய்க்கும் தொழிலாளி. இவருக்கும் இவரது பெரியப்பா மகன் வீரபாண்டி என்பவருக்கும் இடையே ஏற்பட்ட முன் விரோதத்தில் ஜூலை 11ல் காலை கத்தியால் குத்தி வீர குரு கொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவத்தில் காயமடைந்த வீரபாண்டியையும், தேடப்பட்டு வந்த முனியசாமி என்பவரையும் கூமாபட்டி போலீசார் கைது செய்தனர்.