/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ குடியிருப்பில் பட்டாசு தயாரிப்பு இருவர் கைது; 40 கிலோ மணி மருந்து பறிமுதல் குடியிருப்பில் பட்டாசு தயாரிப்பு இருவர் கைது; 40 கிலோ மணி மருந்து பறிமுதல்
குடியிருப்பில் பட்டாசு தயாரிப்பு இருவர் கைது; 40 கிலோ மணி மருந்து பறிமுதல்
குடியிருப்பில் பட்டாசு தயாரிப்பு இருவர் கைது; 40 கிலோ மணி மருந்து பறிமுதல்
குடியிருப்பில் பட்டாசு தயாரிப்பு இருவர் கைது; 40 கிலோ மணி மருந்து பறிமுதல்
ADDED : ஜூலை 15, 2024 05:51 AM

சிவகாசி : விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் பெரியார் காலனியில் குடியிருப்பு பகுதியில் தகர ெஷட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசு உற்பத்தி செய்த இருவரை கைது செய்த போலீசார், 40 கிலோ மணி மருந்தை பறிமுதல் செய்தனர்.
சிவகாசி அருகே திருத்தங்கல் பெரியார் காலனியை சேர்ந்தவர் பால்பாண்டி 48. இவர் அதே பகுதியில் அட்டை தயாரிக்கும் கம்பெனிக்கு உரிமம் பெற்றுள்ளார். ஆனால் அங்கு தகர ெஷட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசு உற்பத்தியில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கிழக்கு போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்த போது, தகர ெஷட்டில் அனுமதி இன்றி அதிக அளவில் மணி மருந்து இருப்பு வைக்கப்பட்டு சட்டவிரோதமாக பேன்சி ரக பட்டாசுகளை உற்பத்தி செய்தது தெரிந்தது. பால்பாண்டி, அவருக்கு உடந்தையாக இருந்த செல்வகுமார் 48, ஆகியோரை போலீசார் கைது செய்து 40 கிலோ மணி மருந்துகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் இது தொடர்பாக பாண்டித்துரை, கார்த்திக் ஆகியோரிடம் விசாரிக்கின்றனர். எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா, டி.எஸ்.பி., சுப்பையா நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
பொதுவாக டி.ஆர்.ஓ., உரிமம் பெற்ற பட்டாசு ஆலையில் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 15 கிலோ மணி மருந்து கையாள்வதற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கு 40 கிலோ மணி மருந்து இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவு வெடிபொருள் பால்பாண்டிக்கு எங்கிருந்து கிடைத்தது என விசாரணை நடக்கிறது.