/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பள்ளி மாணவனை கடத்தி சென்ற டியூசன் ஆசிரியை போக்சோவில் கைது பள்ளி மாணவனை கடத்தி சென்ற டியூசன் ஆசிரியை போக்சோவில் கைது
பள்ளி மாணவனை கடத்தி சென்ற டியூசன் ஆசிரியை போக்சோவில் கைது
பள்ளி மாணவனை கடத்தி சென்ற டியூசன் ஆசிரியை போக்சோவில் கைது
பள்ளி மாணவனை கடத்தி சென்ற டியூசன் ஆசிரியை போக்சோவில் கைது
ADDED : ஜூலை 27, 2024 05:44 AM
சிவகாசி : சிவகாசியில் டியூசனுக்கு வந்த பள்ளி மாணவனிடம் தவறாக பழகி கடத்திச் சென்ற ஆசிரியை பவித்ராவை 24, போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
சிவகாசி சிவானந்தா நகரை சேர்ந்தவர் பவித்ரா . இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். திருமணமான பவித்ரா கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவர் மாலையில் வீட்டில் பள்ளி மாணவர்களுக்கு டியூசன் எடுத்து வந்தார். அவரிடம் டியூசன் படிக்க வந்த 10 ம் வகுப்பு மாணவனுடன் பவித்ராவுக்கு தவறான பழக்கம் ஏற்பட்டது. தேர்வு முடிந்த பின்னரும் மாணவர் ஆசிரியை வீட்டிற்கு சென்று வந்ததால், சந்தேகமடைந்த பெற்றோர் மாணவரை டியூசனுக்கு அனுப்பவில்லை. இந்நிலையில் ஒரு வாரம் மாணவர் வீட்டிலிருந்து மாயமானார். பெற்றோர் டியூசன் ஆசிரியை வீட்டிற்கு சென்று பார்த்த போது, அவர் வீட்டில் இல்லாதது தெரிய வந்தது. சிவகாசி கிழக்கு போலீசார் ஆசிரியையின் அலைபேசி சிக்னலை ஆய்வு செய்த போலீசார், திருப்பூரில் இருந்த மாணவரையும் ஆசிரியையும் மீட்டு சிவகாசி கொண்டு வந்தனர். மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.