/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ விருதுநகர் - சிவகாசி ரோட்டில்பட்டுபோன மரங்களால் விபத்து வாகன ஓட்டிகள் அச்சம் விருதுநகர் - சிவகாசி ரோட்டில்பட்டுபோன மரங்களால் விபத்து வாகன ஓட்டிகள் அச்சம்
விருதுநகர் - சிவகாசி ரோட்டில்பட்டுபோன மரங்களால் விபத்து வாகன ஓட்டிகள் அச்சம்
விருதுநகர் - சிவகாசி ரோட்டில்பட்டுபோன மரங்களால் விபத்து வாகன ஓட்டிகள் அச்சம்
விருதுநகர் - சிவகாசி ரோட்டில்பட்டுபோன மரங்களால் விபத்து வாகன ஓட்டிகள் அச்சம்
ADDED : ஜூலை 27, 2024 05:44 AM

விருதுநகர் : விருதுநகர் - சிவகாசி ரோட்டில் உள்ள பட்டுபோன மரங்கள் ஆடிக்காற்றிற்கு எப்போது வேண்டுமானாலும் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் மீது விழும் நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது.
விருதுநகரில் இருந்து சிவகாசி செல்லும் ரோட்டின் இருபுறமும் மரங்கள் நிறைந்துள்ளது. ஆமத்துார், செங்குன்றாபுரம், வீரசெல்லையாபுரம், மீசலுார், மூளிப்பட்டி உள்பட சுற்றியுள்ள பல பகுதிகளில் இருந்து விருதுநகருக்கு பணிக்காகவும், கலெக்டர் அலுவலகத்திற்கும், அரசு மருத்துவமனைக்கு தினமும் பலரும் வந்து செல்கின்றனர்.
இவர்கள் வரும் வழியில் ரோட்டின் இருபுறமும் உள்ள மரங்களின் பலவும் தற்போது உறுதி தன்மையற்று பட்டுபோன நிலையில் நிற்கிறது. இவை தற்போது வீசும் ஆடிக்காற்றிற்கு தாக்கு பிடிக்காமல், அதன் நிழலில் அமைக்கப்பட்ட கடைகள் மீது விழக்கூடும். மேலும் இப்பகுதியில் ஏற்கனவே அடிக்கடி வாகன விபத்துக்கள் சர்வ சாதாரணமாக நடக்கிறது.
இந்நிலையில் டூவீலர், கார், பஸ்கள் போகும் போது பட்டுபோன மரங்கள் அவற்றின் மீது சாய்ந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்படும். பட்டுபோன மரங்களை அகற்றுவதற்கான பணிகளை உள்ளாட்சி நிர்வாகங்கள் எதுவும் மேற்கொள்ளவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. மேலும் ரோட்டின் ஓரமாக நடந்து செல்பவர்கள் மீது மரத்தின் கிளைகள் விழுந்து காயத்தை ஏற்படுத்துகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம், விருதுநகர் - சிவகாசி ரோட்டில் உள்ள பட்டுபோன மரங்களை அகற்றுவதற்கான பணிகளை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.